|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
நிகரிலா (2)
நிறம் பொன்னும் மின்னும் நிறைந்த சேவடி கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே - 1.திருமாளிகை:1 8/2
நிட்டை இலா உடல் நீத்து என்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும் - 10.சேந்தனார்:1 3/1
TOP
நிகழ்ந்த (1)
நீர் கொள் செம் சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே - 1.திருமாளிகை:2 10/4
TOP
நிகழ்வித்த (1)
நிறம் பொன்னும் மின்னும் நிறைந்த சேவடி கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே - 1.திருமாளிகை:1 8/2
TOP
நிசிசரர் (1)
நீ தலைப்பட்டால் யானும் அவ் வகையே நிசிசரர் இருவரோடு ஒருவர் - 3.கருவூர்:6 7/3
TOP
நிட்டை (1)
நிட்டை இலா உடல் நீத்து என்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும் - 10.சேந்தனார்:1 3/1
TOP
நிணம் (1)
எரி தரு கரிகாட்டு இடு பிண நிணம் உண்டு ஏப்பமிட்டு இலங்கு எயிற்று அழல் வாய் - 3.கருவூர்:10 6/1
TOP
நித்திலத்த (1)
சிறைகொள் நீர் தரள திரள் கொள் நித்திலத்த செம்பொன் சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 5/3
TOP
நித்திலம் (1)
நீலமே கண்டம் பவளமே திருவாய் நித்திலம் நிரைத்து இலங்கினவே - 3.கருவூர்:2 6/1
TOP
நிதம்ப (1)
பொறை அணி நிதம்ப புலி அதள் ஆடை கச்சு நூல் புகுந்தது என் புகலே - 1.திருமாளிகை:2 5/4
TOP
நிதியம் (1)
திரு வளர் தெய்வ பதி விதி நிதியம் திரண்ட சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 2/3
TOP
நிந்தித்து (1)
மாற்கு ஆழி ஈந்து மலரோனை நிந்தித்து
சே காதலித்து ஏறும் தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 10/2,3
TOP
நிமல (1)
நினைத்தேன் இனி போக்குவனோ நிமல திரளை நினைப்பார் - 7.திருவாலி:4 6/1
TOP
நிரந்த (2)
பொன்னும் மணியும் நிரந்த தலத்து புலித்தோல் பியற்கு இட்டு - 7.திருவாலி:3 2/3
முத்தும் மணியும் நிரந்த தலத்துள் முளை வெண் மதி சூடி - 7.திருவாலி:3 7/3
TOP
நிரந்தரம் (1)
நிரந்தரம் முனிவர் நினை திரு கணை கால் நினைந்து நின்று ஒழிந்தது என் நெஞ்சே - 1.திருமாளிகை:2 3/4
TOP
நிரந்தரனே (1)
நினைக்கும் நிரந்தரனே என்னும் நிலா கோல செம் சடை கங்கை நீர் - 2.சேந்தனார்:2 3/1
TOP
நிரந்து (1)
சியர் ஒளி மணிகள் நிரந்து சேர் கனகம் நிறைந்த சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 1/3
TOP
நிரந்தும் (1)
பரந்தும் நிரந்தும் வரம்பு இலா பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 5/4
TOP
நிரம்பா (1)
நெடிய சமணும் மறை சாக்கியரும் நிரம்பா பல் கோடி - 7.திருவாலி:3 10/1
TOP
நிரம்பாத (1)
நிரம்பாத பிறை தூவும் நெருப்பொடு நின் கையில் யாழ் - 3.கருவூர்:5 8/2
TOP
நிருபர் (1)
குடை கெழு நிருபர் முடியொடு முடி தேய்ந்து உக்க செம் சுடர் படு குவை ஓங்கு - 3.கருவூர்:9 3/3
TOP
நிரை (2)
திணர் நிரை அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 1/4
அம் சுடர் புரிசை ஆழி சூழ் வட்டத்து அகம் படி மணி நிரை பரந்த - 3.கருவூர்:1 6/3
TOP
நிரைத்து (1)
நீலமே கண்டம் பவளமே திருவாய் நித்திலம் நிரைத்து இலங்கினவே - 3.கருவூர்:2 6/1
TOP
நில்லாய் (1)
கன்று பிரி கற்றா போல் கதறுவித்தி வரவு நில்லாய்
நன்று இதுவோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 5/3,4
TOP
நிலயமே (1)
நிறைதரு கருணா நிலயமே உன்னை தொண்டனேன் நினையுமா நினையே - 1.திருமாளிகை:1 11/4
TOP
நிலவது (1)
பங்கயம் புரை முகம் நோக்கிநோக்கி பனி மதி நிலவது என் மேல் படர - 8.புருடோத்தம:1 9/2
TOP
நிலவு (1)
சீர் நிலவு இலய திரு நடத்து இயல்பில் திகழ்ந்த சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 4/3
TOP
நிலா (8)
பாய் இரும் கங்கை பனி நிலா கரந்த படர் சடை மின்னு பொன் முடியோன் - 2.சேந்தனார்:1 8/2
நினைக்கும் நிரந்தரனே என்னும் நிலா கோல செம் சடை கங்கை நீர் - 2.சேந்தனார்:2 3/1
பெரியவா கருணை இள நிலா எறிக்கும் பிறை தவழ் சடை மொழுப்பு அவிழ்ந்து - 3.கருவூர்:8 1/1
சடை கெழு மகுடம் தண் நிலா விரிய வெண் நிலா விரிதரு தரள - 3.கருவூர்:9 3/1
சடை கெழு மகுடம் தண் நிலா விரிய வெண் நிலா விரிதரு தரள - 3.கருவூர்:9 3/1
தரள வான் குன்றில் தண் நிலா ஒளியும் தரு குவால் பெருகு வான் தெருவில் - 3.கருவூர்:9 6/3
அருள் புரி முறுவல் முகிழ் நிலா எறிப்ப அந்தி போன்று ஒளிர் திருமேனி - 3.கருவூர்:10 6/3
காய்ந்து வந்துவந்து என்றனை வலிசெய்து கதிர் நிலா எரி தூவும் - 7.திருவாலி:2 6/2
TOP
நிலை (10)
நெறியே என்னும் நெறிநின்றவர்கள் நினைக்கின்ற நீதி வேதாந்த நிலை
குறியே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 4/3,4
வம்பு உலாம் கோயில் கோபுரம் கூடம் வளர் நிலை மாட மாளிகைகள் - 3.கருவூர்:1 10/3
மலை குடைந்து அனைய நெடு நிலை மாட மருங்கு எலாம் மறையவர் முறை ஓத்து - 3.கருவூர்:2 1/3
இந்தன விலங்கல் எறி புனம் தீப்பட்டு எரிவது ஒத்து எழு நிலை மாடம் - 3.கருவூர்:2 2/3
கமலமே வதனம் கமலமே நயனம் கனகமே திருவடி நிலை நீர் - 3.கருவூர்:2 9/3
நாரணன் பரவும் திருவடி நிலை மேல் நலம் மலி கலை பயில் கருவூர் - 3.கருவூர்:2 10/2
நெடு நிலை மாடத்து இரவு இருள் கிழிக்க நிலை விளக்கு அலகு_இல் சாலேக - 3.கருவூர்:7 5/3
நெடு நிலை மாடத்து இரவு இருள் கிழிக்க நிலை விளக்கு அலகு_இல் சாலேக - 3.கருவூர்:7 5/3
பல குலாம் படை செய் நெடு நிலை மாடம் பரு வரை ஞாங்கர் வெண் திங்கள் - 3.கருவூர்:9 1/3
பாடும் இவை வல்லார் பற்று நிலை பற்றுவரே - 4.பூந்துருத்தி:2 10/4
TOP
நிலைபெற்ற (1)
காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ் மாலை - 3.கருவூர்:5 11/2
TOP
நிலைமையோடு (1)
நெஞ்சு இடர் அகல அகம் புகுந்து ஒடுங்கு நிலைமையோடு இருள் கிழித்து எழுந்த - 3.கருவூர்:1 6/1
TOP
நிவவின் (1)
உந்தி இழியும் நிவவின் கரை மேல் உயர்ந்த மதில் தில்லை - 7.திருவாலி:3 4/2
TOP
நிழல் (7)
நிறை தழை வாழை நிழல் கொடி நெடும் தெங்கு இளம் கமுகு உளம்கொள் நீள் பல மா - 1.திருமாளிகை:2 5/1
தன் அடி நிழல் கீழ் என்னையும் தகைத்த சசி குலா மவுலியை தானே - 2.சேந்தனார்:1 4/1
திக்கு எலாம் குலவும் புகழ் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ் - 2.சேந்தனார்:1 6/3
திக்கு எலாம் நிறைந்த புகழ் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ் - 2.சேந்தனார்:1 10/3
முரிவரே முனிவர் தம்மொடு ஆல் நிழல் கீழ் முறை தெரிந்து ஓர் உடம்பினராம் - 3.கருவூர்:2 3/2
குடை நிழல் விடை மேல் கொண்டு உலா போதும் குறிப்பு எனோ கோங்கு இணர் அனைய - 3.கருவூர்:9 3/2
அட்டமூர்த்திக்கு என் அகம் நெக ஊறும் அமிர்தினுக்கு ஆல நிழல்
பட்டனுக்கு என்னை தன்-பால் படுத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 3/3,4
TOP
நிழலாய் (1)
கல் ஆல் நிழலாய் கயிலை மலையாய் காண அருள் என்று - 7.திருவாலி:3 1/2
TOP
நிழலை (1)
கேதகை நிழலை குருகு என மருவி கெண்டைகள் வெருவு கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 9/3
TOP
நிற்கவுமே (1)
ஆடி வரும் போது அருகே நிற்கவுமே ஒட்டாரே - 8.புருடோத்தம:2 2/4
TOP
நிற்கும் (1)
மெய் நின்ற தமர்க்கு எல்லாம் மெய் நிற்கும் பண்பின் உறு - 3.கருவூர்:5 4/3
TOP
நிற்பவர்-தம் (1)
புக்கு நிற்பவர்-தம் பொன் அடி கமல பொடி அணிந்து அடிமை பூண்டேனே - 2.சேந்தனார்:1 6/4
TOP
நிற (1)
வளை இளம் பிறை செம் சடை அரன் மதலை கார் நிற மால் திரு மருகன் - 2.சேந்தனார்:3 6/2
TOP
நிறம் (1)
நிறம் பொன்னும் மின்னும் நிறைந்த சேவடி கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே - 1.திருமாளிகை:1 8/2
TOP
நிறுத்தி (1)
ஆவி உள் நிறுத்தி அமர்ந்து ஊறிய அன்பினராய் - 7.திருவாலி:1 11/2
TOP
நிறை (8)
நிறை தழை வாழை நிழல் கொடி நெடும் தெங்கு இளம் கமுகு உளம்கொள் நீள் பல மா - 1.திருமாளிகை:2 5/1
மான் அமர் தட கை வள்ளல்-தன் பிள்ளை மறை நிறை சட்ட அறம் வளர - 2.சேந்தனார்:3 4/2
நீர் அணங்கு அசும்பு கழனி சூழ் களந்தை நிறை புகழ் ஆதித்தேச்சரத்து - 3.கருவூர்:2 10/1
வினைபடு நிறை போல் நிறைந்த வேதகத்து என் மனம் நெக மகிழ்ந்த பேரொளியே - 3.கருவூர்:4 6/2
பொசியாதோ கீழ் கொம்பு நிறை குளம் என்றது போல - 6.வேணாட்டடிகள்:1 3/1
நெக்கு வீழ்தரு நெஞ்சினை பாய்தலும் நிறை அழிந்திருப்பேனை - 7.திருவாலி:2 2/2
நிறை அணியாம் இறையை நினைத்தேன் இனி போக்குவனே - 7.திருவாலி:4 5/4
நீவியும் நெகிழ்ச்சியும் நிறை அழிவும் நெஞ்சமும் தஞ்சம் இலாமையாலே - 8.புருடோத்தம:1 2/3
TOP
நிறைதரு (1)
நிறைதரு கருணா நிலயமே உன்னை தொண்டனேன் நினையுமா நினையே - 1.திருமாளிகை:1 11/4
TOP
நிறைந்த (8)
நிறம் பொன்னும் மின்னும் நிறைந்த சேவடி கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே - 1.திருமாளிகை:1 8/2
சியர் ஒளி மணிகள் நிரந்து சேர் கனகம் நிறைந்த சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 1/3
திக்கு எலாம் நிறைந்த புகழ் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ் - 2.சேந்தனார்:1 10/3
வினைபடு நிறை போல் நிறைந்த வேதகத்து என் மனம் நெக மகிழ்ந்த பேரொளியே - 3.கருவூர்:4 6/2
உன்னை என்-பால் வைத்து எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே - 3.கருவூர்:4 8/2
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே - 3.கருவூர்:4 9/2
கோவணம் கொண்டு வெண்தலை ஏந்தும் குழகனை அழகு எலாம் நிறைந்த
தீ_வணன்-தன்னை செழும் மறை தெரியும் திகழ் கருவூரனேன் உரைத்த - 3.கருவூர்:7 10/2,3
செல்வம் நிறைந்த சிற்றம்பலமே சேர்ந்தனையே - 4.பூந்துருத்தி:2 3/4
TOP
நிறைந்து (7)
நீடு அலங்காரத்து எம் பெருமக்கள் நெஞ்சினுள் நிறைந்து நின்றானை - 2.சேந்தனார்:1 12/2
நீடினாய் எனினும் உள் புகுந்து அடியேன் நெஞ்சு எலாம் நிறைந்து நின்றாயே - 3.கருவூர்:4 4/4
இனிய தீம் கனியாய் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே - 3.கருவூர்:8 6/4
இன்பனே எங்கும் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே - 3.கருவூர்:8 7/4
மங்குல் சூழ் போதின் ஒழிவற நிறைந்து வஞ்சகர் நெஞ்சகத்து ஒளிப்பார் - 3.கருவூர்:9 9/1
வினைபடு கனகம் போல யாவையுமாய் வீங்கு உலகு ஒழிவற நிறைந்து
துனிபடு கலவி மலை_மகளுடனாய் தூங்கு இருள் நடு நல் யாமத்து என் - 3.கருவூர்:10 3/2,3
தேர் ஆர் வீதியில் தேவர் குழாங்கள் திசை அனைத்தும் நிறைந்து
பார் ஆர் தொல் புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 12/3,4
TOP
நிறைந்தே (1)
நீர் கொள் செம் சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே - 1.திருமாளிகை:2 10/4
TOP
நிறைமையும் (1)
அறிவும் மிக்க நல் நாணமும் நிறைமையும் ஆசையும் இங்கு உள்ள - 7.திருவாலி:2 8/1
TOP
நிறைய (1)
போலுமே முறுவல் நிறைய ஆனந்தம் பொழியுமே திருமுகம் ஒருவர் - 3.கருவூர்:2 6/2
TOP
நின் (17)
கோனே நின் மெய் அடியார் மன கருத்தை முடித்திடும் குன்றமே - 2.சேந்தனார்:2 9/4
முன்பு அளிந்த காதலும் நின் முகம் தோன்ற விளங்கிற்றால் - 3.கருவூர்:5 3/2
பழுது எனவே நினைந்து ஓராள் பயில்வதும் நின் ஒரு நாமம் - 3.கருவூர்:5 6/2
அழுவதும் நின் திறம் நினைந்தே அது அன்றோ பெறும் பேறு - 3.கருவூர்:5 6/3
அரும் பேதைக்கு அருள் புரியாது ஒழிந்தாய் நின் அவிர் சடை மேல் - 3.கருவூர்:5 8/1
நிரம்பாத பிறை தூவும் நெருப்பொடு நின் கையில் யாழ் - 3.கருவூர்:5 8/2
மொய் கொள் எண் திக்கும் கண்ட நின் தொண்டர் முகம் மலர்ந்து இரு கண் நீர் அரும்ப - 3.கருவூர்:6 4/3
அத்தில் அங்கு ஒரு கூறு உன்-கண் வைத்தவருக்கு அமர் உலகு அளிக்கும் நின் பெருமை - 3.கருவூர்:6 8/2
நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுன்னிடை ஒடுங்க நீ வந்து என் - 3.கருவூர்:6 9/3
பெரிது அருள் புரிந்து ஆனந்தமே தரும் நின் பெருமையில் பெரியது ஒன்று உளதே - 3.கருவூர்:7 1/2
பாம்பணை துயின்றோன் அயன் முதல் தேவர் பன்னெடுங்காலம் நின் காண்பான் - 3.கருவூர்:7 2/1
நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுண்ணிமை இறந்தமை அறிவன் - 3.கருவூர்:7 4/2
அளையா விளையாடும் அம்பலம் நின் ஆடரங்கே - 4.பூந்துருத்தி:2 5/4
ஆடகத்தால் மேய்ந்து அமைந்த அம்பலம் நின் ஆடரங்கே - 4.பூந்துருத்தி:2 8/4
கொழுந்தது ஆகிய கூத்தனே நின் குழை அணி காதினின் மாத்திரையும் - 8.புருடோத்தம:1 4/2
ஆருயிர் காவல் இங்கு அருமையாலே அந்தணர் மதலை நின் அடி பணிய - 8.புருடோத்தம:1 7/1
எங்களை ஆளுடை ஈசனேயோ இள முலை முகம் நெக முயங்கி நின் பொன் - 8.புருடோத்தம:1 9/1
TOP
நின்-கண் (1)
கல் நகா உள்ள கள்வனேன் நின்-கண் கசிவிலேன் கண்ணின் நீர் சொரியேன் - 3.கருவூர்:4 3/1
TOP
நின்-பாலே (1)
நீ வாராது ஒழிந்தாலும் நின்-பாலே விழுந்து ஏழை - 3.கருவூர்:5 5/1
TOP
நின்ற (24)
நீறு அணி பவள குன்றமே நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே - 1.திருமாளிகை:1 6/1
சிறவாதவர் புரம் செற்ற கொற்ற சிலை கொண்டு பன்றி பின் சென்று நின்ற
மறவா என்னும் மணி நீர் அருவி மகேந்திர மா மலை மேல் உறையும் - 1.திருமாளிகை:3 1/2,3
பூ ஏந்தி மூவாயிரவர் தொழ புகழ் ஏந்து மன்று பொலிய நின்ற
கோவே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 8/3,4
அச்சம்கொண்டு அமரர் ஓட நின்ற அம்பலவற்கு அல்லா - 1.திருமாளிகை:4 9/2
ஆதி அமரர் புராணனாம் அணி ஆவடுதுறை நம்பி நின்ற
நீதி அறிகிலள் பொன் நெடும் திண் தோள் புணர நினைக்குமே - 2.சேந்தனார்:2 2/3,4
சேல் உலாம் கழனி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற
வேல் உலாம் தட கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்_இயல் இவளே - 2.சேந்தனார்:3 1/3,4
திவள் அம் மாளிகை சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற
குவளை மா மலர் கண் நங்கையாள் நயக்கும் குழகன் நல் அழகன் நம் கோவே - 2.சேந்தனார்:3 2/3,4
தேவின் நல் தலைவன் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற
தூவி நல் பீலி மா மயில் ஊரும் சுப்பிரமண்ணியன் தானே - 2.சேந்தனார்:3 3/3,4
தேன் அமர் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற
கோன் அமர் கூத்தன் குல இளம் களிறு என் கொடிக்கு இடர் பயப்பதும் குணமே - 2.சேந்தனார்:3 4/3,4
திணம் மணி மாட திருவிடைக்கழியில் திரு குரா நீழல் கீழ் நின்ற
கண மணி பொரு நீர் கங்கை-தன் சிறுவன் கணபதி பின் இளங்கிளையே - 2.சேந்தனார்:3 5/3,4
திளை இளம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற
முளை இளம் களிறு என் மொய் குழல் சிறுமிக்கு அருளும்-கொல் முருகவேள் பரிந்தே - 2.சேந்தனார்:3 6/3,4
தெரிந்தவை திகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற
வரிந்த வெம் சிலை கை மைந்தனை அம் சொல் மையல்கொண்டு ஐயுறும் வகையே - 2.சேந்தனார்:3 7/3,4
திகை மிகு கீர்த்தி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற
தொகை மிகு நாமத்தவன் திருவடிக்கு என் துடி_இடை மடல் தொடங்கினளே - 2.சேந்தனார்:3 8/3,4
திடம் கொள் வைதிகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற
மடங்கலை மலரும் பன்னிரு நயனத்து அறு முகத்து அமுதினை மருண்டே - 2.சேந்தனார்:3 9/3,4
தெருண்டவை திகர் வாழ் திருவிடை கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற
குருண்ட பூம் குஞ்சி பிறை சடை முடி முக்கண் உடை கோமள கொழுந்தே - 2.சேந்தனார்:3 10/3,4
செழும் தடம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற
எழும் கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர் கெடும் மால் உலா மனமே - 2.சேந்தனார்:3 11/3,4
மை நின்ற குழலாள் தன் மனம் தரவும் வளை தாராது - 3.கருவூர்:5 4/1
இ நின்ற கோவணவன் இவன் செய்தது யார் செய்தார் - 3.கருவூர்:5 4/2
மெய் நின்ற தமர்க்கு எல்லாம் மெய் நிற்கும் பண்பின் உறு - 3.கருவூர்:5 4/3
செம்பொனே பவள குன்றமே நின்ற திசைமுகன் மால் முதல் கூட்டத்து - 3.கருவூர்:8 7/1
மூவாயிரவர் தங்களோடு முன் அரங்கு ஏறி நின்ற
கோவே உன்றன் கூத்து காண கூடுவது என்று-கொலோ - 5.கண்டராதித்:1 2/3,4
இறைவனை என் கதியை என் உளே உயிர்ப்பு ஆகி நின்ற
மறைவனை மண்ணும் விண்ணும் மலி வான் சுடராய் மலிந்த - 7.திருவாலி:4 5/1,2
மூத்தனை மூவுருவின் முதலை முதலாகி நின்ற
ஆத்-தனை தான் படுக்கும் அந்தணர் தில்லை அம்பலத்துள் - 7.திருவாலி:4 7/2,3
ஆர் இனி அமரர்கள் குறைவு_இலாதார் அவரவர் படு துயர் களைய நின்ற
சீர் உயிரே எங்கள் தில்லை_வாணா சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிதே - 8.புருடோத்தம:1 7/3,4
TOP
நின்றது (1)
பொன் ஆர் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னா - 5.கண்டராதித்:1 1/2
TOP
நின்றமையால் (1)
வினைபடும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே - 3.கருவூர்:4 6/4
TOP
நின்றவன் (1)
தூ திரள் பளிங்கின் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் வளர் கோயில் - 3.கருவூர்:1 7/2
TOP
நின்றனவே (1)
பிறை கொள் சென்னி அன்றே பிரியாது என்னுள் நின்றனவே - 7.திருவாலி:1 10/4
TOP
நின்றாயே (1)
நீடினாய் எனினும் உள் புகுந்து அடியேன் நெஞ்சு எலாம் நிறைந்து நின்றாயே - 3.கருவூர்:4 4/4
TOP
நின்றாயை (2)
படர் ஒளி பரப்பி பரந்து நின்றாயை தொண்டனேன் பணியுமா பணியே - 1.திருமாளிகை:1 2/4
ஒருமையில் பல புக்கு உருவி நின்றாயை தொண்டனேன் உரைக்குமாறு உரையே - 1.திருமாளிகை:1 4/4
TOP
நின்றாரே (1)
சீலமா பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகி நின்றாரே - 3.கருவூர்:4 10/4
TOP
நின்றானுக்கே (1)
பாலும் அமுதமும் ஒத்து நின்றானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 8/4
TOP
நின்றானை (1)
நீடு அலங்காரத்து எம் பெருமக்கள் நெஞ்சினுள் நிறைந்து நின்றானை
வேடு அலங்கார கோலத்தின் அமுதை திருவீழிமிழலை ஊர் ஆளும் - 2.சேந்தனார்:1 12/2,3
TOP
நின்று (30)
நிரந்தரம் முனிவர் நினை திரு கணை கால் நினைந்து நின்று ஒழிந்தது என் நெஞ்சே - 1.திருமாளிகை:2 3/4
எண்_இல் பல் கோடி எல்லைக்கு அப்பாலாய் நின்று ஐஞ்ஞூற்று அந்தணர் ஏத்தும் - 2.சேந்தனார்:1 9/3
இழிவு ஒன்று இலா வகை எய்தி நின்று இறுமாக்கும் என் இள_மான் அனே - 2.சேந்தனார்:2 8/4
பண் பல தெளி தேன் பாடி நின்று ஆட பனி மலர் சோலை சூழ் மொழுப்பில் - 3.கருவூர்:1 5/3
செருந்தி நின்று அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 11/4
வளர் ஒளி மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே - 3.கருவூர்:3 1/4
வண்டு அறை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே - 3.கருவூர்:3 2/4
புரிதரு மலரின் தாது நின்று ஊத போய்வரும் தும்பிகாள் இங்கே - 3.கருவூர்:3 3/2
வள்ளலே மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே என்னும் என் மனனே - 3.கருவூர்:3 4/4
கேழலும் புள்ளும் ஆகி நின்று இருவர் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 5/3
மழை தவழ் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தர்-தம் வாழ்வு போன்றதுவே - 3.கருவூர்:3 7/4
மன்னவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனத்துள் வைத்தனனே - 3.கருவூர்:3 8/4
பாதுகை மழலை சிலம்பொடு புகுந்து என் பனி மலர் கண்ணுள் நின்று அகலான் - 3.கருவூர்:3 9/2
மாதவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் புகுந்தானே - 3.கருவூர்:3 9/4
வந்த நாள் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே அறியும் என் மனமே - 3.கருவூர்:3 10/4
கித்தி நின்று ஆடும் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 11/1
மத்தனை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனை ஆரணம் பிதற்றும் - 3.கருவூர்:3 11/2
மண்ணின் நின்று அலறேன் வழி மொழி மாலை மழலை அம் சிலம்பு அடி முடி மேல் - 3.கருவூர்:6 2/2
பண்ணி நின்று உருகேன் பணிசெயேன் எனினும் பாவியேன் ஆவியுள் புகுந்து என் - 3.கருவூர்:6 2/3
மண் இயல் மரபின் தங்கு இருள் மொழுப்பின் வண்டு இனம் பாட நின்று ஆடும் - 3.கருவூர்:7 4/3
புலம் கலந்தவனே என்று நின்று உருகி புலம்புவார் அவம் புகார் அருவி - 3.கருவூர்:10 9/3
கரும் கண் நின்று இமைக்கும் செழும் சுடர் விளக்கம் கலந்து என கலந்து உணர் கருவூர் - 3.கருவூர்:10 10/2
நின்று நினைந்து இருந்து கிடந்து எழுந்து தொழும் தொழும்பனேன் - 6.வேணாட்டடிகள்:1 5/1
அதிர வார் கழல் வீசி நின்று அழகா நடம் பயில் கூத்தன் மேல் திகழ் - 7.திருவாலி:1 6/3
வையம் உய்ய நின்று மகிழ்ந்து ஆடு சிற்றம்பலவன் - 7.திருவாலி:1 8/2
வளர் பொன் மலையுள் வயிர மலை போல் வலக்கை கவித்து நின்று
அளவு_இல் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே - 7.திருவாலி:3 3/3,4
மாலோடு அயனும் அமரர்_பதியும் வந்து வணங்கி நின்று
ஆலகண்டா அரனே அருளாய் என்றென்று அவர் ஏத்த - 7.திருவாலி:3 9/1,2
ஏத்த நின்று ஆடுகின்ற எம்பிரான் அடி சேர்வன்-கொலோ - 7.திருவாலி:4 7/4
கைத்தலங்கள் வீசி நின்று ஆடுங்கால் நோக்காரே - 8.புருடோத்தம:2 9/4
கூவி கவர்ந்து நெருங்கி குழாம்குழாமாய் நின்று கூத்து ஆடும் - 10.சேந்தனார்:1 6/2
TOP
நின்னோடு (1)
முத்தீயாளர் நான்மறையர் மூவாயிரவர் நின்னோடு
ஒத்தே வாழும் தன்மையாளர் ஓதிய நான்மறையை - 5.கண்டராதித்:1 3/1,2
TOP
நினை (2)
நிரந்தரம் முனிவர் நினை திரு கணை கால் நினைந்து நின்று ஒழிந்தது என் நெஞ்சே - 1.திருமாளிகை:2 3/4
சா வாயும் நினை காண்டல் இனி உனக்கு தடுப்பு அரிதே - 6.வேணாட்டடிகள்:1 10/4
TOP
நினை-தொறும் (1)
தவள_வண்ணனை நினை-தொறும் என் மனம் தழல் மெழுகு ஒக்கின்றதே - 7.திருவாலி:2 1/4
TOP
நினைக்கின்ற (1)
நெறியே என்னும் நெறிநின்றவர்கள் நினைக்கின்ற நீதி வேதாந்த நிலை - 1.திருமாளிகை:3 4/3
TOP
நினைக்கும் (1)
நினைக்கும் நிரந்தரனே என்னும் நிலா கோல செம் சடை கங்கை நீர் - 2.சேந்தனார்:2 3/1
TOP
நினைக்குமே (1)
நீதி அறிகிலள் பொன் நெடும் திண் தோள் புணர நினைக்குமே - 2.சேந்தனார்:2 2/4
TOP
நினைகிலை (1)
தாயினும் மிக நல்லை என்று அடைந்தேன் தனிமையை நினைகிலை சங்கரா உன் - 8.புருடோத்தம:1 8/2
TOP
நினைத்தேன் (2)
நிறை அணியாம் இறையை நினைத்தேன் இனி போக்குவனே - 7.திருவாலி:4 5/4
நினைத்தேன் இனி போக்குவனோ நிமல திரளை நினைப்பார் - 7.திருவாலி:4 6/1
TOP
நினைந்து (6)
நிரந்தரம் முனிவர் நினை திரு கணை கால் நினைந்து நின்று ஒழிந்தது என் நெஞ்சே - 1.திருமாளிகை:2 3/4
திக்கு அடா நினைந்து நெஞ்சு இடிந்து உருகும் திறத்தவர் புறத்து இருந்து அலச - 3.கருவூர்:2 7/1
பழுது எனவே நினைந்து ஓராள் பயில்வதும் நின் ஒரு நாமம் - 3.கருவூர்:5 6/2
நின்று நினைந்து இருந்து கிடந்து எழுந்து தொழும் தொழும்பனேன் - 6.வேணாட்டடிகள்:1 5/1
வாடா வாய் நா பிதற்றி உனை நினைந்து நெஞ்சு உருகி - 6.வேணாட்டடிகள்:1 8/1
உம்மையே நினைந்து ஏத்தும் ஒன்று ஆகிலள் - 9.சேதிராயர்:1 4/2
TOP
நினைந்தே (1)
அழுவதும் நின் திறம் நினைந்தே அது அன்றோ பெறும் பேறு - 3.கருவூர்:5 6/3
TOP
நினைப்பார் (1)
நினைத்தேன் இனி போக்குவனோ நிமல திரளை நினைப்பார்
மனத்தினுளே இருந்த மணியை மணி மாணிக்கத்தை - 7.திருவாலி:4 6/1,2
TOP
நினைப்பு (1)
நினைப்பு அரும் தம்-பால் சேறல் இன்றேனும் நெஞ்சு இடிந்து உருகுவது என்னோ - 3.கருவூர்:9 7/2
TOP
நினையாது (1)
ஒன்றி ஒருகால் நினையாது இருந்தாலும் இருக்க ஒட்டாய் - 6.வேணாட்டடிகள்:1 5/2
TOP
நினையில் (1)
சிந்தையால் நினையில் சிந்தையும் காணேன் செய்வது என் தெளி புனல் அலங்கல் - 3.கருவூர்:3 10/2
TOP
நினையுமா (1)
நிறைதரு கருணா நிலயமே உன்னை தொண்டனேன் நினையுமா நினையே - 1.திருமாளிகை:1 11/4
TOP
நினையே (1)
நிறைதரு கருணா நிலயமே உன்னை தொண்டனேன் நினையுமா நினையே - 1.திருமாளிகை:1 11/4
TOP
நினைவது (1)
யாது நீ நினைவது எவரை யாம் உடையது எவர்களும் யாவையும் தானாய் - 3.கருவூர்:3 9/1
TOP
| |
|